விடுதலை சிறுத்தைகள் கட்சி சர்வதேச இணையக்குழுமத்தின் நோக்கங்கள் :
1) 25 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை ஒன்றே குறிக்கோளாய் கொண்டு, கொண்ட கொள்கையில் கிஞ்சிற்றும் விலகாமல் களமாடி வரும் போராளித்தலைவரை பற்றியும் விடுதலை சிறுத்தைகளை பற்றியும் உலகத்தமிழர்களிடம் அவதூறு பரப்பிவரும் சாதியவாதிகளின் முகத்திரையை கிழித்து ஈழவிடுதலைக்கும், சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் களமாட இத்தளம் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொள்ளும்.
2) தினம் தினம் மாறும் அரசியல் சூழல்களை அரசியல் காழ்ப்புனர்ச்சிகளுக்கு அப்பார்ப்பட்டு, வரலாற்று சான்றுகளுடன் இந்த தளம் விவாதிக்கும்.
3) சாதி ஒழிப்பின் அவசியத்தையும், அதன் பேரில் நடக்கும் கொடுமைகளையும் இக்குழு முழுமையாக தமிழர்களிடம் கொண்டு சென்று சாதி ஒழிப்பில் இத்தளம் தீவிரப்படும்.
4) தமிழர் விடுதலைக்கும், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் தினம் 20 மணிநேரம் உழைக்கும் போராளித்தலைவரை
பற்றியும், அவரது தினசரி செயல்பாடுகளை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ள இத்தளம் ஆவண செய்யும்.
5) போராளித்தலைவரின் பேச்சுக்கள், பேட்டிகள், நாடாளுமன்ற உரைகளை இத்தளம் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கும்.
6) மாற்றுக்கட்சி தோழர்களும் பயன்பெறும் வகையில் உங்கள் சந்தேகங்கள், விமர்சனங்களை நீங்கள் இக்குழுவுவில் முன்வைக்கலாம். அதற்க்கு சான்றுகளுடன் அதிகபட்சம் 48 மணிநேரத்திற்குள் போராளித்தலைவர் உங்களுக்கு பதிலளிக்க இத்தளம் உதவி செய்யும்.
7) இயக்க தோழர்கள், மற்றும் இயக்க நலம் விரும்பிகளின் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் இங்கே வெளியிடப்படும்.
என்பதை இத்தளம் பெருமையுடன் பிரகடனப் படுத்துகிறது.
No comments:
Post a Comment